1. துதித்துப்பாட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசஞ் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்திரிப்போமே
பல்லவி:
ஆ ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
2 கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே. ஆ!