18px
#909Tamil Spiritual Song

Itho Manusharin Mathiyil Devaathi Devanae

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

பல்லவி: இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே. சரணங்கள்:
1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே - இதோ
2. தேவ ஆலயமும் அவரே-தூய ஒளி விளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் சுத்த ஜீவ நதியும் அவரே - இதோ
3. மகிமை நிறை பூரணமே - மகா பரிசுத்த ஸ்தலமதுவே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே - இதோ
4. சீயோனே உன் வாசல்களை-ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனைக் கூறி உயர்த்திடுவோம் உன்னையே - இதோ
5. முன்னோடியாம் இயேசு பரன்-மூலைக் கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் - இதோ