18px
#911Tamil Spiritual Song

Vinthai Kireesthesu Raja (When I Survey Tamil)

விந்தைக் கிறிஸ்தேசு ராஜா!

பல்லவி: விந்தைக் கிறிஸ்தேசு ராஜா! உந்தன் சிலுவை என் மேன்மை. அனுபல்லவி: சுந்தரம் மிகும் இந்தப் பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி, செல்வாக்குகள் மிக விருப்பினும், குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமை யாவும் அற்பமே - விந்தை
2. உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம், வற்றா ஜீவநதியாம்; துங்க இரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்து மேன்மையாகினேன் - விந்தை
3. சென்னி, விலா, கை, காலினின்று சிந்துததோ! துயரோடன்பு; மன்னா, இதைப்போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை
4. இந்த விந்தை அன்புக் கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன்; எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன். - விந்தை