#914Tamil Spiritual Song
Enthan Jebhavelai Umaithedi Vanthaen
எந்தன் ஜெபவேளை உம்மை தேடிவந்தேன்
பல்லவி:
எந்தன் ஜெபவேளை உம்மை தேடிவந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்.
1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே
தயைக் கேட்டு உம் பாதம் வந்தேன். - எந்தன்
2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள்செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே - எந்தன்
3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்தனை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா - எந்தன்
