#870Tamil Spiritual Song
Anbum Unmaiyum Ulla Paraloka Pithaa
அன்பும் உண்மையும் உள்ள பரலோக பிதா
பல்லவி:
அன்பும் உண்மையும் உள்ள பரலோக பிதா
குமாரனை அளித்தார்
இரத்தம் சிந்தி நம் பாவத்தைக் கழுவ சிலுவையில்
அர்ப்பணித்தார்
சரணங்கள்:
1. தியாகமான தமதன்பைக் காட்டி
நிறைவேற்றினார் உடன்படிக்கையை
நம்மை அவரே படைத்ததனால்
நமக்கு அன்பைக் காட்டினார். - அன்பும்
2. நித்திய அன்பைக் காண்பித்தாரே
சிலுவையில் அதை நிரூபித்தாரே
தம் இரத்தத்தினால் பாவிகளையே
சுத்தர்களாய் மாற்றினார். - அன்பும்
3. தகப்பனைப் போல் தம் அன்பைக் காட்டி
நீசப் பாவிகளை நேசித்தார்
பாவங்களை அறிக்கை செய்வோரை
பாசமாக மன்னிப்பார் - அன்பும்
4. நம் ஜீவியங்களை மாற்றினார்
தம் ஜனத்தோடே நம்மைச் சேர்த்தார்
மகா மேன்மையான அன்பைக் காட்டி
சுதந்தரம் அளித்தார் - அன்பும்
5. ஆவி ஆத்துமா சரீரத்தை
அர்ப்பணித்து அவரைத் துதிப்போம்
அல்லேலூயா, துதி, மகிமை, கனம்
என்றும் நம் கர்த்தருக்கே - அன்பும்
