18px
#875Tamil Spiritual Song

Yesuvai Yetrukonden Deva Puthiranumaanen

இயேசுவை ஏற்றுக் கொண்டேன்

1. இயேசுவை ஏற்றுக் கொண்டேன்- தேவ புத்திரனுமானேன் (2) பரமானந்தம் மெய் சமாதானம்- ஜெயத்தின்மேல் ஜெய மடைந்தேன் (2) பல்லவி: நன்றி செலுத்துவேன்-கிருபை பெற்றேன் பரலோக ராஜ்ஜியத்தை அடைவேன் சரணங்கள்:
2. பிதாவின் அன்பைப் பெற்றேன்-அவரோடு ஒப்புரவானேன் கையில் மோதிரமும், பாதரட்சைகளும் புதிய அங்கியும் பெற்றேன் -நன்றி
3. அக்கிரமங்களை மன்னித்தாரா என் பாவங்களை மூடினார் எனக்கெதிராய் இருந்தவைகளை எடுத்து சிலுவையிலே அறைந்தார். -நன்றி
4. பாவ தண்டனை நீங்கிற்று நான் புதிய சிருஷ்டியானேன் இராஜனும் ஆசாரியனுமாக்கினார் பாடுவேன் அல்லேலூயா. -நன்றி
5. இவ்வுலகமதைவிட்டு பரலோகத்தைச் சேர்ந்திடுவேன் இன்பதினத்தை ஆசையோடு நான் எதிர்நோக்கிக் காத்திருப்பேன். -நன்றி