18px
#874Tamil Spiritual Song

Yesu Podhume! Yesu Podhume!

இயேசு போதுமே இயேசு போதுமே

1. எனக்காய் ஜீவன் விட்டவரே-என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே.
பல்லவி: இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலும்மே எந்தன் வாழ்வினிலே - இயேசு போதுமே.
2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே. - இயேசு.
3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரணடை நடத்திடுவார் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார். - இயேசு.
4. மனிதர் என்னைக் கை விட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும். - இயேசு