18px
#878Tamil Spiritual Song

Rakshakare Karthar Yesu Sthothiram (Romans 8 Tamil)

இரட்சகரே கர்த்தர் இயேசு ஸ்தோத்திரம்

பல்லவி: இரட்சகரே கர்த்தர் இயேசு ஸ்தோத்திரம் தேவா இலட்சணமாம் நித்ய அன்பைக் காட்டின மூவா சரணங்கள்:
1. தேவனே நம் பட்சமானால் நமக்கு விரோதி யார்? தூதரானாலும் அதிகாரமானாலும், தேவ அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாது -இரட்சகரே
2. அடிமை ரூபமெடுத்துத் தம்மை வெறுமையாக்கினார் பஞ்சமானாலும் கொஞ்சமானாலும், தேவ அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாது-இரட்சகரே
3. சர்வலோக பாவங்கட்காய் சிலுவையில் மாண்டார் கஷ்டமாயினும் நஷ்டமாயினும், தேவ அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது-இரட்சகரே
4. எண்ணில்லாத பாடுபட்டார் நமக்காகவே இன்னலானாலும் என்னவானாலும் தேவ அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது-இரட்சகரே
5. மரணத்தை வென்று மூன்றாம் நாளில் எழுந்தார் மரணமானாலும் ஜீவனானாலும், தேவ அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது-இரட்சகரே
6. தேவனுடைய வலது பாரிசத்தில் உள்ளதால் உயர்வானாலும் தாழ்வு ஆனாலும், தேவ அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது-இரட்சகரே
7. என்றும்மாறா இயேசு கிறிஸ்து நம்மோடிருப்பதால் உள்ளவைகளும் வருபவைகளும், தேவ அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது, அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - இரட்சகரே