18px
#879Tamil Spiritual Song

Yesuvai Visuvaasippaar (Psalm 92)

இயேசுவை விசுவாசிப்போர்

பல்லவி: இயேசுவை விசுவாசிப்போர் - அவர் கிருபையினாலே நீதிமான்களாக்கப்படுவார். சரணங்கள்:
1. பனையைப் போல் செழிப்பார்கள் இரட்சிப்புக்காய்த் துதிப்பார்கள். குருத்தோலைகளைப் பிடிப்பார்கள் கருத்தாய் வேதம் படிப்பார்கள் - இயேசு
2. கேதுருபோல் வளருவார்கள் - மாதிரிகளாயிருப்பார்கள் கிருபையில் பெருகிடுவார்கள்- அறிவில் வளர்ந்திடுவார்கள் - இயேசு
3. ஆலயத்தில் நாட்டப்பட்டிருப்பார் காலமெல்லாம் நிலைத்திருப்பார், அன்றாடும் அவரைத்துதிப்பார் குன்றாமல் என்றும் ஜெபிப்பார். - இயேசு
4. பிரகாரங்களில் செழித்திருப்பார் வரங்களையும் உபயோகிப்பார், வார்த்தையின் படியே செய்வார் ஆத்திரப் படாமலிருப்பார் - இயேசு
5. முதிர் வயதில் கனிதருவார்- புஷ்டி பசுமையுமாயிருப்பார், கர்த்தரைக் கனப்படுத்துவார் உத்தமரெனக் காட்டுவார் - இயேசு
6. நீர்க்கால்களின் ஓரமிருப்பார்- பார்க்கக் கனிகளோடிருப்பார் சாரத்தை என்றும் பெறுவார் நேரத்தை அவருக்குத் தருவார். - இயேசு
7. அல்லேலூயா பாடுவார் - வல்லவரை வாழ்த்திடுவார், வருகைக்காகக் காத்திடுவார், பொறுமையாக இருந்திடுவார். - இயேசு