18px
#884Tamil Spiritual Song

Koncha Kaalamae Minchiyullathu

கொஞ்சக் காலமே மிஞ்சியுள்ளது

பல்லவி: கொஞ்சக் காலமே மிஞ்சியுள்ளது கர்த்தர் இயேசு கிறிஸ்து திரும்ப வருவார் கொஞ்சமாகிலும் காலம் கடந்திடாதே சரணங்கள்:
1. அட்சயன் வரும் வரை காத்திருப்போம் நிச்சயமாய் அவர் வந்திடுவார் பட்சமாய் வருகைக்கு காத்திருப்போரை கர்த்தர் தம்மோடே கொண்டேகுவார் - கொஞ்ச
2. சமீபமானது அவர் வருகை சபை கூடுதலில் நாம் நிலைத்திருப்போம் கர்த்தர் வசனத்திற்கு கீழ்ப்படிந்து நாம் கர்த்தருக்காக காத்திருப்போம் - கொஞ்ச
3. ஆவியின் ஜீவியம் அழிகிறதே அநேகரின் அன்பு குளிர்ந்திடுதே நித்திரை தெளிந்து எழும்பிடுவோம் நாம் விடப்பட்டால் நம் நிலை என்னாகுமோ - கொஞ்ச
4. சொந்த கிரியைகளில் சிந்தை கொள்ளுவோர் சோர்ந்து நித்திரையில் மூழ்கிடுவார் விழித்துள்ளோரே பரம் சென்றிடுவார் விடப்பட்டோர் இந்நிலம் பரிதவிப்பார் - கொஞ்ச
5. நோவாவின் நாட்களை நினைத்திடுவோம் பாவங்களை எல்லாம் களைந்திடுவோம் விடுதலையின் நாள் விரைந்திடுதே நாம் விமலனைச் சேர்ந்து இளைப்பாறுவோம் - கொஞ்ச