#883Tamil Spiritual Song
Nigarilla Kristhesuvae
நிகரில்லா கிறிஸ்துவே
பல்லவி:
நிகரில்லா கிறிஸ்துவே - ஒருவராய் ஒளியிலுள்ளவரே
அல்பாவும் ஒமெகாவும் நீரே கர்த்தர் நீரே கர்த்தர்
சரணங்கள்:
1. இக பரம் இரண்டிலும் உம் தோற்றம்
மகா ஆனந்தம் அளித்ததே
அபயம் அளித்தீர் எமக்கு - பயப்படாதீர் ரென்றுரைத்து
2. ஜீவனுள்ள உம் வார்த்தைகளே
ஜீவளை அளித்தது, எங்களுக்கு
பரிசுத்தராம் கிறிஸ்தேசு - பாரினில் மாதிரி நீரே
3. மரணத்தை வென்ற மகிபர் நீர்
புரம பிதாவானீர் எமக்கு
பகைவனை சிலுவையில் ஜெயித்தீர்
பரிசுத்தராக்கினீர், எம்மை
4. பாவத்தின் சாபத்தையும் தீர்த்தீர்
பரமபாதையில் நடத்துகிறீர்
பராக்கிரமமுள்ளவரே-பாடுவோம் உம் துதிகளையே
5. நானிலமெங்கும் தேவன் நீர்
நித்தியம் நிலைக்கும், உம் அன்பே
நரரின் அறிவுக்கு எட்டா - உயர்தரமானதும் அன்பே
6. சபையின் சிரசானவர் நீர்-அவயவங்களாய் அமைத்தீர்
பரிபூரணமுள்ளவரே - பரனே மகிமை உமக்கே
