18px
#886Tamil Spiritual Song

Neengal Migundha Kanitharuvathaal (John 15)

நீங்கள் மிகுந்த கனிதருவதால்

பல்லவி: நீங்கள் மிகுந்த கனிதருவதால் - பிதா மகிமைப்படுவார் இவ்விதமாய் கனி கொடுப்பதால்-சீஷர்களாய் இருப்பீர் சரணங்கள்:
1. நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போல் நீரூற்றைப் போலவும் நீ இருப்பாய் வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவார் பலப்படுத்துவார் உன் எலும்புகளை மிகுதியாய் கனி கொடுப்பீர். - நீங்கள்
2. வனாந்தரத்தில் ஆறுகளை அவாந்தரத்தில் தண்ணீர்களை காய்ந்த நிலத்தில் நீரூற்றுகளைப் பாய்ந்தோடச் செய்வார் நம் கர்த்தரே நம் கர்த்தரான இயேசுவினால் மிகுதியாய் கனி கொடுப்பீர் - நீங்கள்
3. வேகமாய்ப் பாய்ந்தோடும் நதியைப் போல பெருகச் செய்வார் உன் சமாதானத்தை ஐசுவரியத்தால் நிரப்பிடுவார் முதிர்வயது வரை சுமந்திடுவார் நம் கர்த்தரான கிறிஸ்துவுக்குள் மிகுதியாய் கனி கொடுப்பீர். - நீங்கள்
4. ஊமையன் நாவும் கெம்பீரிக்கும் முடவன் மானைப்போல் குதித்திடுவான் புற ஜாதியார் புகழ்ந்திடுவார் கர்த்தரின் அதிசய கிரியைகளை மகிமை கனம் துதி செலுத்தி-அல்லேலூயா பாடுவீர்- நீங்கள்