18px
#893Tamil Spiritual Song

Ratchanyathin Menmai (Mountains of Salvation)

இரட்சண்யத்தின் மேன்மை

பல்லவி: இரட்சண்யத்தின் மேன்மை - இரட்சகரால் தெரியுமே மலைச் சிகரங்கள் போல் பெரிதாமே-நிலையுள்ளதாமே. சரணங்கள்:
1. கந்தை போலவேயிருந்தோம் நிந்தையாலே நிறைந்திருந்தோம் தந்தைபோலவே நம்மைத் தேடி வந்தார் விந்தையாகவே இரட்சித்தார். - இரட்
2. பாழான நிலத்திலும் - வெறுமையான வெளியிலும் கண்டு பிடித்து நடத்தி உணர்த்தினார் கண்மணிபோல காத்தார். - இரட்
3. யாக்கோபைப் போலிருந்தோம் இன்று இஸ்ரவேலாக்கப்பட்டோம் தேவனுடைய சொந்த பங்குமானோம் சுதந்தர வீதமானோம். - இரட்
4. மலைகள் அவரின் கிரியை அங்கே கிடைப்பதெல்லாம் அருமை ஆபிரகாம் மோசே எலியா இயேசு- ஏறினார் தெரியுமே. - இரட்
5. கழுகு குஞ்சைச் சுமப்பதுபோல் வழுவாமல் காப்பதுமேல் இளைப்படையாமல் மேல் ஏறுவதால் களைப்பின்றியே செய்கிறார். - இரட்
6. இயேசுவின் சத்தியங்கள்-சிகரங்களுக் கடையாளங்கள் இரட்சிப்புக்கும் உதாரணங்கள் நிறைந்ததாம் பாடங்கள். - இரட்
7. ஏசாயாவின் அதிகாரங்கள் - இரட்சிப்பின் விபரங்கள் ஒப்பனையானதாம் சிகரங்கள் இப்போதேறிப் பாருங்கள். - இரட்