18px
#892Tamil Spiritual Song

O Yesu Umadhanbhu Ethannai Periyathu

ஓ இயேசு உமதன்பு எத்தனை பெரியது

பல்லவி: ஓ இயேசு உமதன்பு எத்தனை பெரியது, ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது. சரணங்கள்:
1. அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது, ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது அன்றாடும் காலை மாலைகளிலும் துதிக்க உயர்ந்தது, துதிக்க உயர்ந்தது - ஓ இயேசு
2. சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன், துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன், பங்கமில்லாமல் பதிலளிப்பேன் என்றதால் பாடுகிறேன், என்றதால் பாடுகிறேன் - ஓ இயேசு
3. இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும், அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும், கருணையா யென்னைக் கரம் பிடித்தே, கர்த்தரே காப்பதாலும், கர்த்தரே காப்பதாலும் - ஓ இயேசு
4. குறைவுள்ளவனானாலும் கூடவே இருக்கிறீர் நிறைவாம் புல்தரைகளில் மெதுவாய் நடத்துகிறீர இறைவனாம் இயேசு எல்லாவற்றாலும் திருப்தியாக்குகிறீர் திருப்தியாக்குகிறீர். - ஓ இயேசு
5. தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன், ஏக இதயத்துடனே என்றுமதை மதிப்பேன், ஆராதிக்க அருகராம் இயேசு அல்லேலூயா ஆமென், அல்லேலூயா ஆமென். - ஓ இயேசு