#899Tamil Spiritual Song
Neethimaankalin Jebangalaiyae
நீதிமான்களின் ஜெபங்களையே
பல்லவி:
நீதிமான்களின் ஜெபங்களையே கர்த்தர் கேட்கிறார்
பனையைப் போல அவர்கள் செழித்தே வளருவார்கள்.
சரணங்கள்:
1. என்னை நோக்கியே நீ கூப்பிடு- உத்தரவு கொடுப்பேன்
அறியாததும் எட்டாததுமானவைகளை - அறிவிப்பேன்.
2. இதுவரை நீங்கள் என் நாமத்தினால்-
எதுவும் கேட்கவில்லை
கேளுங்கள் சந்தோஷம் நிறைவாகும்படி-
பெற்றுக் கொள்ளுவீர்கள்.
3. கர்த்தருக்குக் காத்திருப்போர் புதுப் பெலன்-அடைவார்கள்
கழுகுகளைப் போல் செட்டைகளடித்து-எழும்பிடுவார்கள்.
4. வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும்-
மிகவும் அதிகமாய்
நமக்குள் கிரியை செய்ய வல்லவர்க்கு-
ஸ்தோத்ரம் மிதமாய்
5. நான் உன்னைவிட்டு விலகுவதில்லை-கை விடுவதில்லை
நீங்கள் அதனால் தைரியங்கொண்டு-பயப்படுவதில்லை.
6. தேவன் தம் ஐசுவரியத்தின்படி-குறைவை நீக்கிடுவார்
கிறிஸ்தேசுவுக்குள் மகிமையிலே - நிறைவாக்கிடுவார்.
7. நிச்சயமாக நானே உன்னை- ஆசீர்வதிப்பேனே
உன்னைப் பெருகவே பெருகப்பண்ணி-பலப்படுத்துவேனே.
