18px
#900Tamil Spiritual Song

Prabhu Yesu En Ratchakaa (Open My Eyes)

பிரபு இயேசு என் இரட்சகா

பல்லவி: பிரபு இயேசு என் இரட்சகா என்றும் உம்மைக்காணும் கண்களை எமக்குத் தாரும்,அல்பாவும் நீரே ஒமெகாவும் நீரே. சரணங்கள்:
1. பிரியமுள்ள யோவான் பத்முவிலே சரியாயும்மை அவன் பார்த்ததாலே, பாக்கியம் அடைந்தவன் கண்களைப்போலவே ஆக்குமென் கண்களைத் தேவா. - பிரபு
2. எண்ணிக்கையில்லாத பாவஞ்செய்தேன் தண்ணீர்போல் தீமையைத்தான் குடித்தேன், என்னை நீர்மாற்றி நானும்மைப் பார்க்கவே அன்னையே கண்களைத் தாரும். - பிரபு
3. நல்ல கண்களைத் துர்வினியோகித்தேன் பொல்லாதவைகளைப் பார்க்க விட்டேன், எல்லா தீமைகளையும் நான் வகித்தேன் வல்லவா கலிக்கம் போடும். - பிரபு
4. ஸ்தேவானைப்போலும்மைப் பார்த்தவர்கள் பிரகாச முகங்கள் அடைந்தார்கள், ஏக்கமேதுமின்றி ஊக்கமாயிருந்தார்கள் வாக்கின்படி நடந்தார்கள். - பிரபு
5. விசுவாசத்தைத் துவக்கி முடிப்பவா விழாமல் என்றுமென்னைக் காப்பவா, பாரமானதை நான் களைந்து தேவா நேராய் ஓடச் செய்யும் மூவா. - பிரபு
6. கண்ணால் நான் காணாதவைகளையும் காதால் நான் கேளாதவைகளையும் இருதயத்தில் தோன்றாதவைகளையும் அருமையாய்க் காட்டியருளும். - பிரபு
7. கண்களின் இச்சைகளைக் காணாமல், விண்ணவர் சொன்னதைமட்டும் காணும், தூயனே அவ்வித கண்களைத் தாரும் ஆயனே அல்லேலூயா. - பிரபு