#905Tamil Spiritual Song
Parisuthar Koottam Naduvil
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
பல்லவி:
பரிசுத்தர் கூட்டம் நடுவில்-ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில் - அடியார் நெஞ்சம் வாரீரோ
சரணங்கள்:
1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
பொல்லாதோர் கூட செய்திடார்-
நற்பிதா நலம் அருள்வார் - பரிசுத்தர்
2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்யமாட்டீரோ - பரிசுத்தர்
3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் - பரிசுத்தர்
4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லை எங்கிலும்
பரிசுத்தம் என எழுதும் - பரிசுத்தர்
