18px
#906Tamil Spiritual Song

Makilvom Makilvom Thinam

மகிழ்வோம் மகிழ்வோம் தினம்

1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு ராஜன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார். பல்லவி: ஆ... ஆ... ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே...இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்.
2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் தூரம் போயினும் கண்டு கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் - ஆஆ
3. எந்தச்சூழ் நிலையும், அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார் என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரை காத்துக் கொள்வேன். - ஆஆ
4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக் கொள்வார் அவர் சமூக மதில் அங்கே அவருடனே ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன். - ஆஆ