#907Tamil Spiritual Song
Santhosham Ponguthae
சந்தோஷம் பொங்குதே
பல்லவி:
சந்தோஷம் பொங்குதே (2)-சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார்- முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
சரணங்கள்:
1. வழிதப்பி நான் திரிந்தேன்-பாவ பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே - அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் - பாவம் நீங்கிற்றே. - சந்தோ
2. சத்துரு சோதித்திட தேவ - உத்திரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்-தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் - சொந்தமானாரே - சந்தோ
3. பாவத்தில் ஜீவிப்பவர் - பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் - நாளும் பாடல் பாடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு - என்றும் வாழுவேன்- சந்தோ
