#918Tamil Spiritual Song
Enthan Anbhulla Aandavarae
எந்தன் அன்புள்ள ஆண்டவரே
பல்லவி:
எந்தன் அன்புள்ள ஆண்டவரே-ஆயிரம் ஸ்தோத்திரமே
நீர் செய்த நன்மைக்கெல்லாம்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே
சரணங்கள்:
1. ஆபத்துக் காலத்திலே-அடியேன் உம்மை நினைத்தேன்
ஆண்டவா உம் தயவால்-ஆசீர்வாதம் நான் பெற்றேன் - எந்தன்
2. ஒரு நொடிப் பொழுதினிலே-மாய்ந்திருக்கும் என் வாழ்வில்
திருவுள்ளம் தந்தீரையா-நான் கிருபையாய் வாழ்வதற்கே - எந்தன்
3. இன்று நான் பாடுவது - உம்மால் தான் இயேசுநாதா
என்றும் நான் பாட வேண்டும் நாதா
என்னுள் நீர் வாழவேண்டும் - எந்தன்
