#917Tamil Spiritual Song
Thuyaadhi Thuyavarae Umadhu Pugalai
தூயாதி தூயவரே
பல்லவி:
தூயாதி தூயவரே-உமது புகழை நான் பாடவேண்டும்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின் புகழ் பாடவேண்டும்
சரணங்கள்:
1. சீடரின் கால்களை கழுவினவர்
செந்நீரால் என் உள்ளம் கழுவினீரே - பாரில்
2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே - பாரில்
3. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்கும் ஓர் இடம் தந்தீரே - பாரில்
