#920Tamil Spiritual Song
Entha Kaalathilum, Entha Nerathilum
எந்தக்காலத்திலும் எந்த நேரத்திலும்
பல்லவி:
எந்தக்காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்.
1. ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே. - எந்த
2. தாய் தந்தை நீரே - தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே. - எந்த
3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே. - எந்த
4. வானிலும் நீரே - பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என ஆபத்தில் நீரே. - எந்த
5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் - என் நேசரும் நீரே. - எந்த
6. ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே
ஆத்தும நேசராம் என் நண்பரும் நீரே. - எந்த
7. ஞானமும் நீரே - தானமும் நீரே
நியாயமும் நீரே - என் நாதனும் நீரே. - எந்த
8. ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே
ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே. - எந்த
9. மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே. - எந்த
10. தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
இராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே. - எந்த
