18px
#921Tamil Spiritual Song

Thaen Inimayilum Yesuvin Naamam

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

1. தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே – அதைத் தேடியே நாடி ஓடியே வருவீர், திருச்சபையானோரே
2. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே - பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீமனமே
3. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் - பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி நீ மனமே
4. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும் - என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே
5. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் - நீயும் அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார் ஆசை கொள் நீ மனமே.
6. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம் - அதைப் பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே.