#873Tamil Spiritual Song
Arul Eraalamaai Peyyum (Showers of Blessing Tamil)
அருள் ஏராளமாய்ப் பெய்யும்
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் - உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் - சபையை உயிர்ப்பிக்குமே.
பல்லவி:
அருள் ஏராளம் - அருள் அவசியமே;
அற்பமாய் சொற்பமாயல்ல,-திரளாய்ப் பெய்யட்டுமே.
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் - மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் - செழிப்பும் பூரிப்புமாம் !அருள்!
3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் - இயேசு வந்தருளுமேன்!
இங்குள்ள கூட்டத்திலேயும் - கிரியை செய்தருளுமேன் !அருள்!
4. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே!
அருளின் மாரியைத் தாரும் - ஜீவ தயாபரரே! !அருள்!
