#880Tamil Spiritual Song
Aaraadhippom Vaarum Karthar Yesuvai
ஆராதிப்போம் வாரும் கர்த்தர் இயேசுவை
பல்லவி:
ஆராதிப்போம் வாரும் கர்த்தர் இயேசுவை
ஆவி, உண்மையோடும், ஆண்டவரை - அன்பின் பிதாவை.
சரணங்கள்:
1. பாவ மன்னிப்பளித்தார் அவர் நமக்கு
விடுவித்தார் இரத்தத்தால் சாபத்தினின்று
ஜெயம் கூறிடுவோம் சதா அவர்க்கே - ஆராதிப்
2. கண்களைத் திறந்தார் இயேசுவைக் காண
கண்டடைந்தோம் ஆவியின் கட்டிடத்தை
அற்புதர், அற்புதர் சதா அவரே - ஆராதிப்
3. சுதந்தரம் பெற்றிடப் பாத்திரரானோம்
அதிகாரம் பெற்று ராஜ்ஜியம் ஆள
ஒசன்னா, ஒசன்னா ஜெயராஜர்க்கே - ஆராதிப்
4. உலகத்தை ஜெயிக்கும் ஜீவியம் ஈந்தார்
சிலுவையின் சக்தியால் காத்தாரே நம்மை
துதிப்போம், துதிப்போம் கர்த்தர் இயேசுவை - ஆராதிப்
5. கர்த்தருக்காக சபை காத்திருக்குதே
நித்தியமாய் அவரை நாம் அடைய
வந்தனம், வந்தனம் சிருஷ்டிகருக்கே - ஆராதிப்
