#881Tamil Spiritual Song
Rusipaarthu Arindhu Konden (Psalm 34 Tamil)
ருசிபார்த்து அறிந்து கொண்டேன்
பல்லவி:
ருசிபார்த்து அறிந்து கொண்டேன்
கர்த்தர் நல்லவர் என்றறிந்தேன்
அனுபல்லவி:
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
பாக்கியமுள்ளவனானேன் - சரணங்கள்
1. மகத்துவமுள்ள கர்த்தாவே-துதிகளுக்குப் பாத்திரர் நீரே
நித்தம் ஆராதிக்கப்படுவோர் தயாபரரும் நீரே - ருசி
2. உன்னதத்தில் வாசம் பண்ணுவோர்
புகழப்படத்தக்கவர் நீரே - மனதார புகழ்ந்திடுவேன்
உம் அதிசயக் கிரியைகளையே - ருசி
3. நன்மைகளினால் நிறைந்தவர் நீர்-எல்லாரிலும் சிறந்தவரே
உம் நீதியின் கிரியைகளையே
கெம்பீரமாய்ப் பாடிடுவேன் - ருசி
4. நான் உயிரோடிருக்கு மட்டும்
என் கர்த்தரை நான் துதிப்பேன்
உலகில் நான் உள்ளளவும்
கீர்த்தனம் பண்ணிடுவேன் - ருசி
5. என்றென்றும் மகிழ்ச்சியாயிருப்பேன்
துன்பம் துக்கம் நோவிலுமே
எந்நாளுமென்னைத் தேற்றுகிறார்
என் இரட்சகர் கிறிஸ்தேசு - ருசி
6. இடைவிடாமலே ஜெபித்திடுவேன்
கர்த்தர் சமூகத்தில் சேர்ந்து
தடையின்றி பெற்றுக்கொள்வேன்
விருப்பமானவைகளை - ருசி
7. எல்லாவற்றிலேயுமே - ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்
என் நேசர் இயேசுவில் என்றும்
களிப்பாய் நான் மகிழ்ந்திடுவேன் - ருசி
