18px
#882Tamil Spiritual Song

Tholugirom Engal Pithaavae

தொழுகிறோம் எங்கள் பிதாவே

பல்லவி: தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே. அனுபல்லவி: பரிசுத்த அலங்காரத்துடனே-தரிசிப்பதினால் சரணம் சரணம். சரணங்கள்:
1. நந்நலங்கட்கோர் முதலே, நற்செயை நீர் தந்ததாலே திரித்துவு யேகத்துவனே, திரிலோகனே சரணம் சரணம். - தொழு
2. பாவி நேசன் பாவ நாசன் பரம பாசன் வரமே வாசன், துங்கா சிங்கன் மங்காத் தங்கன் துய்ய அங்கனே சரணம் சரணம். - தொழு
3. வெண்மையும் சிவப்பு மானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர், என்னையே மீட்டுக் கொண்டவர், அன்னையே இதோ சரணம் சரணம் - தொழு
4. தலை தங்க மயமானவர்- தலைமயிர் சுருள் சுருளானவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் பதினாயிரமாம் சரணம் சரணம் - தொழு
5. கண்கள் புறாக் கண்கள் போல, கன்னங்கள் பாத்திகள் போல, சின்னங்கள் சிறந்ததாலே, எண்ணில்லாத சரணம் சரணம் - தொழு
6. கரங்கள் பொன் வளையல்கள் போல, நிறங்களும் தந்தத்தைப் போல, கால்களும் கல் தூண்கள் போல, காண்பதாலே சரணம் சரணம் - தொழு
7. சமஸ்த சபையின் சிரசே, நமஸ்காரம் எங்கள் அரசே, பிரதான எம் மூலைக்கல்லே, ஏராளமாம் சரணம் சரணம். - தொழு
8. அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக் கெட்டாத விஸ்தாரம், கூடி வந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம். - தொழு
9. பார்த்திபனே கன தோத்திரம், கீர்த்தனம் மంగళம் தோத்திரம், வாழ்க, வாழ்க, வாழ்க என்றும், அல்லேலூயா ஆமென் ஆமென். - தொழு