18px
#888Tamil Spiritual Song

Unnathathin Parisutharae

உன்னதத்தின் பரிசுத்தரே

பல்லவி: உன்னதத்தின் பரிசுத்தரே உம் இரட்சிப்புக்காய் ஸ்தோத்திரங்கள் உம் இரட்சிப்புக்காய் ஸ்தோத்திரங்கள். சரணங்கள்:
1. உன்னதத்தின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் தேவா எவ்வளவாய் உயர்ந்தது உம் மகிமை—வர்ணிக்க இயலாதென்றும் -உன்
2. பாவ குஷ்டரோகியான-பாவி எனக்கிரங்கினீர் பாவ கறைகளையே கழுவி-பரிசுத்தராக்கின தேவா-உன்
3. அசுத்தமான உதடுகளோடே- அகதியாய் ஜீவித்தேனே ஆடிமை நாவின் கட்டவிழ்த்து அரும் துதிகளை பாடவும் செய்தீர் -உன்
4. நீர் அளித்த மீட்புக்காக என் கர்த்தாவே உம்மை துதிப்பேன் எல்லாரிலும் கனமுள்ளவரே கல்வாரியின் நாதா இயேசுவே -உன்
5. மகிமையில் பாடி மகிழ்வேன் மகா ஆனந்த களிப்புடனே மனிதர் தூதரிலும் உயர்ந்தோரா மகிபரே துதி செலுத்திடுவேன் -உன்
6. வான தூதர்களிடையிலும் வானவரே உம்மைக் காண்பேன் வாரும் என் இரட்சகரே விரைவில் வல்லவரே உமக்கென் துதியே -உன்