#889Tamil Spiritual Song
Yesu Enra Thiru Naamathirku
இயேசு என்ற திரு நாமத்திற்கு
பல்லவி:
இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதும் மிக ஸ்தோத்திரம்
சரணங்கள்:
1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது,
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது. - இயேசு
2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது,
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே. - இயேசு
3. பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது,
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது. - இயேசு
4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது,
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது. - இயேசு
5. சஞ்சலம் வருத்தம் சோதனை, நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது,
தடை முற்றும் அகற்றிடும் நாமமது. - இயேசு
