#890Tamil Spiritual Song
Aanandhamae Paramaananthamae
ஆனந்தமே பரமானந்தமே
பல்லவி:
ஆனந்தமே பரமானந்தமே - இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே.
சரணங்கள்:
1. இந்தப்புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என்நேசர் மொழிந்தனரே!
இக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும். - ஆனந்
2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்யக் கோட்டையே
காரணமின்றிக் கலங்கேனே யான்
விசுவாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே. - ஆனந்
3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்க்
கண்ணீரின் பள்ளத் தாக்கல்லோ இது
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெயக் கீதம் பாடி மகிழ்ந்திடலாம். - ஆனந்
4. கூடார வாசிகளாகும் நமക്കിங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ ?
கைவேலையல்லாத வீடொன்றை மேலேதான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ - ஆனந்
5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடினும்,
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையைத்
துன்பத்தினூடே அனுப்பிடுவார். - ஆனந்
6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குறேனே!
என் நேசர் தன்முக ஜோதியதே யல்லால்
இன்பத் தரும் பொருள் ஏதுமில்லை. - ஆனந்
