18px
#891Tamil Spiritual Song

Bhayapadaathae Siru Mandhaiye (Little Flock)

பயப்படாதே சிறு மந்தையே

பல்லவி: பயப்படாதே சிறு மந்தையே ராஜ்ஜியம் கொடுக்க பிதா பிரியமே. சரணங்கள்:
1. உலகத்தில் உபத்திரவங்களே உண்டு சிலகாலம் அவைகள் நீடிப்பதுண்டு, கலங்காதிரு உன்னைக் காப்பேனே கண்டு. - பயப்
2. சத்ரு சிங்கம் போல திரிந்தாலும் ஓநாயைப் போலவே சீறினாலும், வெள்ளம் போலவே எல்லாம் வந்தாலும் - பயப்
3. கள்ள மேய்ப்பர் கலங்கடித்தாலும் பள்ளத்தாக்கின் ஊடே நடந்தாலும் நல்ல மேய்ப்பன் கூடயிருப்பதாலும். - பயப்
4. குமாரன் இரத்தத்தால் உன்னைக் கொண்டார் குறைகளை நிறைவாக்குவேன் என்றார், மறைவான மன்னாவையுமே தந்தார். - பயப்
5. பரம அழைப்பை உனக்குத் தந்தார் ஸ்திரமாயிருக்க வரமாக வந்தார், மரமாம் சிலுவையில் மந்தைக்காய் மாண்டார் - பயப்
6. விக்கினங்கள் உன்னைச் சூழும்போது அக்கினியில் அகப்படும்போது, பக்கத்தில் இருப்பார் உன்னோடப் போது. - பயப்
7. தண்ணீர்களை நீ கடக்கும்போதும் ஆறுகளை நீ கடக்கும்போதும் ஆவைகள் உன்மேல் புரளமாட்டாது. - பயப்