#901Tamil Spiritual Song
Vaanangalum Vaanaathi Vaanangal
வானங்களும், வானாதி வானங்களும்
பல்லவி:
வானங்களும், வானாதி வானங்களும்மைக்
கொள்ளா அற்புதர்!
சரணங்கள்:
1. கிருபையையும் நிபந்தனையும்
அருமையாய் காத்த தேவரீர்,
பார்த்து வந்தீர், பராமரித்தீர்,
சேர்த்து இம்மட்டும் நடத்தினீர். - வானங்
2. எல்லா ஜாதி ஜனங்களும்—
வல்ல இரட்சிப்படையச் செய்யும் —
கல்வாரியின் இரத்தத்தினால்
பொல்லாததைச் சுத்தி செய்யும். - வானங்
3. நீதி நியாயமுள்ள தேவா—
ஜோதியில் வாசஞ் செய்பவா,
வாதிக்களைச் சிநேகிப்பவா
போதியதைப் பொழிகிறவா— - வானங்
4. நீரே ராஜாதி ராஜவே—கர்த்தாதி கர்த்தரானவரே,
எங்களை ராஜாவாக்கினீரே-
ஆசாரியர்களாக்கினீரே - வானங்
5. பஞ்சம் பட்டினி கொள்ளை நோயில்—
கெஞ்சுவோரின் தஞ்சமானவா
அஞ்சுகிறோம் நெஞ்சில் தேவா
எஞ்சுகிறோம் மிஞ்சும் மூவா. - வானங்
6. கைகளினால் கட்டப்பட்டதில்-காணப்படா வல்ல தேவா,
மெய்யாயெம்மில் இருக்கிறவா
செய்கைகளினால் தெரிகிறவா - வானங்
7. நித்திய வாசியானவா - சத்தியமாம் பெயர் கொண்டவா,
இத்தரையில் எம்மோடுள்ளவா
அத்தனே உமக்கல்லேலூயா. - வானங்
