#922Tamil Spiritual Song
Kaattu Marangalin Naduvil (Oru Kichili Maram Pola)
காட்டு மரங்களின் நடுவில்
1. காட்டு மரங்களின் நடுவில்
ஒரு கிச்சிலி மரம் போல
பரிசுத்தர்கள் மத்தியிலே
இயேசு சிறந்து விளங்குகிறார்.
பல்லவி:
போற்றுவேன் எந்தன் நேசரை
ஜீவ காலமெல்லாம் மோட்ச யாத்திரையில்
நன்றியோடே நான் பாடுவேன்.
2. சாரோனின் ரோஜா அவரே
பள்ளத்தாக்கின் லீலி அவரே
பரிசுத்தரில் சுத்தர்வர்
பதினாயிரங்களில் சிறந்தோர்.
3. ஊற்றுண்ட தைலம் உம் நாமம்
அதன் வாசனை வீசிடுதே
நிந்தை பாடுகள் நெருக்கங்களில்
நானும் நற்கந்தமாகச் செய்யும்.
4. மன சஞ்சலம் தாங்கிடாமல்
துக்க சாகரத்திலமிழ்கையில்
திருகரம் நீட்டி எடுத்தணைத்தே
பயப்படாதே என்றுரைத்தவரே
5. என் பாதைக்கு தீபமும் நீர்
என் வாழ்வுக்கு ஜீவனும் நீர்
என் சேவைக்கு வல்லமை நீர்
என் ஆவிக்கு ஆறுதல் நீர்.
